ஈரோடு சூலை 3:

தமிழகத்தில் தொழில் முனைவோரை ஊக்குவிக்க மீன் வளம், நீர் வாழ் உயிரின வளர்ப்பில் அதிக முதலீடு செய்திடும் நோக்கில் மீன் வள மேம்பாட்டு திட்டத்தில் தொழில் முனைவோர் மாதிரி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மீனவர்கள், மீன் வளர்ப்போர், சுய உதவிக்குழு, கூட்டு பொருப்பு குழு, மீன் வளர்ப்போர் உற்பத்தியாளர் அமைப்பு, தனி நபர் தொழில் முனைவோர், தனியார் நிறுவனங்கள் இத்திட்டத்தில் பயன் பெறலாம். பொது பிரிவினருக்கு 25 சதவீதம் என 1.25 கோடி ரூபாய் வரை மத்திய, மாநில அரசின் நிதியுதவியும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மகளிருக்கு, 30 சதவீதமாக 1.50 கோடி ரூபாய் வரை மத்திய, மாநில அரசின் நிதியுதவியும் வழங்கப்படும்.

பயன் பெற விரும்புவோர், ஈரோடு மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு ஜூலை 31ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். கூடுதல் விபரங்களை www.fisheries.tn.gov.in என்ற இணைய தளத்திலும் பெறலாம். விருப்பம் உள்ளவர்கள், ஈரோடு மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகம், 42, சுப்புராம் காம்ப்ளெக்ஸ், 2ம் தளம், கலெக்டர் அலுவலகம் அருகே, பெருந்துறை சாலை, ஈரோடு – 11, தொலைபேசி: 0424 2221912, மின்னஞ்சல் முகவரி: [email protected] மூலம் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே