ஈரோடு ஆக 24:

ஈரோடு வீட்டு வசதி பிரிவில் விற்பனை பத்திரம் பெற நாளை (24ம் தேதி) முதல் மூன்று நாள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஈரோடு பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் ஒதுக்கீடு பெற்று, விற்பனை பத்திரம் பெறாமல் உள்ள மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளின் ஒதுக்கீடுதாரர்களுக்கு விற்பனை பத்திரம் வழங்கும் மூன்று நாள் சிறப்பு முகாம் வரும் 24ம் தேதி (நாளை) முதல் 26ம் தேதி வரை நடக்கிறது.

ஈரோடு சம்பத் நகரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ஈரோடு வீட்டு வசதி பிரிவு அலுவலகத்தில் நடக்கும் இந்த முகாமில் ஒதுக்கீடுதாரர்கள் தங்களது முழுத்தொகையையும், தேவையான ஆவணங்களையும் சமர்பித்து, வரைவு கிரய பத்திரம் (விற்பனை பத்திரம்) பெற்று கெள்ளலாம், என ஈரோடு வீட்டு வசதி பிரிவு செயற்பொறியாளரும், நிர்வாக அதிகாரியுமான கே.ஏ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today