ஈரோடு அக்.20:

ஈரோடு, சென்னிமலை ரோட்டில் மாவட்ட தொழில் மையம் அருகே கடந்த சில நாட்களாக பெய்த மழையால் மழைநீர் தேங்கி இருந்தது. இதனால் ரோட்டின் மத்தியில் குழாய் அமைத்து குழாய் மூலம் தண்ணீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்காக நேற்று இந்த ரோட்டில் மத்தியில் குழி தோண்டப்பட்டு குழாய் பதிக்கும் பணி நடந்தது. பின்னர் குழாய் பாதிக்கப்பட்டு மண்ணால் மூடிவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் கரூர் தோகைமலையை சேர்ந்த சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான லாரி ஒன்று விரகு லோடுகளை ஏற்றிக்கொண்டு ஈரோடு நோக்கி வந்தது. லாரியை சிவா (32) என்பவர் ஓட்டி வந்தார்.

சென்னிமலை ரோடு  அருகே வந்தபோது குழாய் தோண்டப்பட்டு மூடப்பட்டிருந்த பகுதியை கடந்தபோது ரோட்டின் இடது புறம் திடீரென கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று காலை 6 மணிக்கு அதே பகுதியை சிமெண்ட் லோடு ஏற்றி வந்த ஒரு லாரி கடக்க முயன்றபோது அங்குள்ள  பள்ளத்தில் சிக்கிக்கொண்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து சூரம்பட்டி போலீசாருக்கும் போக்குவரத்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பள்ளத்தில் சிக்கியிருந்த லாரியை ஜே.சி.பி. இயந்திரம் மூலம் மீட்டனர். இதன் பின்னரே போக்குவரத்து சீரானது. இப்பகுதிரோடுகளை சீரமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். https://www.tnhighways.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/