ஈரோடு டிச 24:
ஈரோடு, பவானி ரோடு சுண்ணாம்பு ஓடை அருகே ரபீக் என்பவருக்கு சொந்தமான தோல் பதனிடும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைப்பார்த்த ஆலை ஊழியரான கனகராஜ் என்பவர் ஈரோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
இதன்பேரில், விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஆலையில் ஏற்பட்ட தீயினை 30 நிமிடம் போராடி அணைத்தனர். இந்த விபத்தில் ஆலையில் இருந்த ஒரு இயந்திரம், கன்வெயர் பெல்ட் தீயில் கருகிறது. விபத்திற்கு புகைபோக்கியில் (சிம்னி) இருந்து பரவிய தீப்பொறியே காரணம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். https://www.cms.tn.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today