அந்தியூர் நவ. 1:

அந்தியூர் தாலுகா அம்மாபேட்டை ஒன்றியம் கேசரிமங்கலத்தில் விவசாயிகளுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் அட்மா திட்டம் மூலம் வயல் விழா நடத்தப்பட்டது. அம்மாபேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மு.கனிமொழி தலைமை வகித்து, வேளாண் துறை திட்டங்கள், அட்மா திட்ட பயிற்சி, செயல்விளக்கம், பண்ணைபள்ளி பற்றி விளக்கினார்.

மண் மாதிரி எடுக்கும் முறை, மண் பரிசோதனையின் அவசியம் பள்ளி, ஈரோடு மண் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் சுகன்யாவும், பல்வேறு துறையினர் கால்நடை வளர்ப்பு, பட்டு வளர்ப்பு, அவற்றுக்கான திட்டம் குறித்து விளக்கினர். ஈரோடு அங்ககச்சான்று ஆய்வாளர் மகாதேவன், இயற்கை விவசாயம் செய்வதன் நன்மை, அங்ககச்சான்று குறித்தும் விளக்கினார்.

இயற்கை வேளாண்மை செய்யும்போது இயற்கை சூழலில் ரசாயன உரங்கள், பூச்சி கொல்லி மருந்துகள், மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை தவிர்த்து, தோட்டங்களில் இயற்கை முறையில் பண்ணையில் இருந்து பெறப்பட்ட இடுபொருட்களை மட்டுமே கொண்டு சாகுபடி செய்ய வலியுறுத்தினர். இயற்கை முறையில் சான்று பெறவிரும்பும் விவசாயிகள் தனியாகவோ, குழுவாகவோ பதிவு செய்யலாம் என விளக்கினர். https://www.tnagrisnet.tn.gov.in,

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/