ஈரோடு டிச 15:

தந்தை பெரியார் தமிழ்நாட்டின் மகாத்மா பூலே என்று சூழலியல் ஆர்வலர் மேதா பட்கர் புகழாரம் சூட்டி உள்ளார். ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த சூழலியல் ஆர்வலர் மேதா பட்கர், ஈரோட்டில் உள்ள தந்தை பெரியார் வாழ்ந்த பெரியார் அண்ணா நினைவு இல்லத்திற்கு சென்று பார்வையிட்டார்.

பெரியார் வாழ்ந்த வீடு மற்றும் தந்தை பெரியாரின் வாழ்வியல் குறித்த புகைப்படங்களை ஆர்வத்துடன் பார்வையிட்டதோடு அதில் உள்ள தகவல்களையும் கேட்டறிந்தார்.

பின்னர் நினைவு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பார்வையாளர்கள் புத்தகத்தில் கையொப்பமிட்ட மேதா பட்கர், “மறைந்த தந்தை பெரியார் சமூக, பொருளாதார ஏற்ற தாழ்வுகள் மற்றும் பிராமணியத்திற்கு எதிராக போராடிய “தமிழ்நாட்டின் மகாத்மா பூலே” என்றும், அவர் காட்டிய ஒளியை நாம் எப்போதும் பின்பற்ற வேண்டும் என்றும், பெரியாரின் நினைவுகளை அழகாக பாதுகாத்து வரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதோடு, தமிழக அரசு பெரியாரின் பாதையை பின்பற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். https://www.freepressjournal.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today