ஈரோடு அக் 5:

உத்தரபிரதேசம் மாநிலம் லக்கீம்பூரில் 3-வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்திய விவசாயிகள் சென்ற பேரணியின் போது கார் ஏற்றிய விபத்தில் நான்கு விவசாயிகள் கொல்லபட்டனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில் எட்டு பேர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஷ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் உள்ள விவசாய அமைப்புகள் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு சூரம்பட்டி நான்கு சாலை பகுதியில் பல்வேறு விவசாய சங்கங்களின் சார்பில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பபட்டது.

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/