ஈரோடு அக்.19:

சத்தியமங்கலம் வட்டம், புஞ்சை புளியம்பட்டி மாதம்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

மாதம்பாளையம் பகுதியில் உள்ள வேதகிரிமலை நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழை நீரானது அங்குள்ள ஜல்லிக்குட்டைக்கு வந்து கொண்டிருந்தது. குட்டையில் தண்ணீர் தேங்கி நிற்கும் போது சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாய கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வந்தது. இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த குட்டைக்கு வரும் நீர் வழிப்பாதை மற்றும் குட்டையை சிலர் ஆக்கிரமித்தனர். இதனால் குட்டைக்கான தண்ணீர் நீர் வரத்து தடைபட்டது. ஆக்கிரமிப்பு காரணமாக அத்திக்கடவு அவினாசி திட்டம் மூலம் வரவேண்டிய தண்ணீர் திட்டமும் தடைபட்டுள்ளது. எனவே குட்டை மற்றும் குட்டைக்கு வரும் நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றிட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. https://www.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/