ஈரோடு ஆக 25:
ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காணொலி காட்சி மூலமாக நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடக்கிறது. இதில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அந்தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்கள் மற்றும் ஈரோடு வேளாண்மை இணை இயக்குனர் அலுவகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக பங்கேற்கலாம்.
மேலும், தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களில் வழங்கலாம். விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மாவட்ட கலெக்டரின் தலைமையிலான அதிகாரிகள் கண்காணித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மனுக்களை அனுப்பி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தகவலை ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today