ஈரோடு டிச 15:

ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகளுக்கு பொட்டாஸ் உரம் தட்டுபாடின்றி கிடைக்கவும், விலை உயர்வை கட்டுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை ஓரளவுக்கு பெய்ததாலும், காலிங்கராயன், கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும் பெரும்பாலான விவசாயிகள் வேளாண் பணிகளை மேற்கொண்டுள்ளனர். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களுக்கு பொட்டாஸ் உரம் கிடைப்பதில் தட்டுப்பாடாக உள்ளது.

இந்த தட்டுபாட்டின் காரணமாக ரூ.900க்கு விற்பனை செய்யப்பட்ட பொட்டாஸ் உரம் தற்போது ரூ.1700க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே, மாவட்டத்தில் அனைத்து உர விற்பனை நிலையங்களிலும் யூரியா உரம் தட்டுபாடின்றி கிடைக்கவும், விலை உயர்வை கட்டுப்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு கோரிக்கை விடுத்துள்ளார். https://www.tnagrisnet.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today