.
ஈரோடு சூலை 19:
ஈரோடு சம்பத் நகர் உழவர் சந்தைக்கு ஞாயிற்று கிழமைகளில் மிக அதிக அளவில் விவசாயிகள் வருவார்கள். அங்கு, 120 விவசாயிகள் வரை அமர்ந்து விற்பனை செய்ய, ஒவ்வொருவருக்கும் தனி கடைகள் போன்ற அமைப்பு உள்ளது. கொரோனா ஊரடங்கால் இரண்டு மாதங்களுக்கு மேல் மூடப்பட்டு கடந்த வாரம் திங்கள் முதல் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. விவசாயிகள் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்றும், காலை, 6 மணி வரை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இதனால் நேற்று 57 விவசாயிகள் மட்டுமே வருகை புரிந்தனர். 12.8 டன் காய்கறி விற்பனைக்கு வந்து, 3.6 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. 2 ஆயிரத்து 296 வாடிக்கையாளர்கள் வந்து சென்றனர். வழக்கமாக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வருகை புரிவார்கள். இதனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.today