ஈரோடு நவ 10:

ஈரோட்டில் காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. இதனால் மாவட்டத்தில் உள்ள அணைகள் மற்றும் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வழிகின்றது. பவானிசாகர் அணையானது முழு கொள்ளளவானது 105 அடியாகும்.

அணையின் நீர்மட்டம் 104 அடியை நெருங்கிவிட்டதால் உபரிநீர் 10 ஆயிரம் கனஅடி பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதே போல மேட்டூர் அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகின்றது. மொத்த கொள்ளளவான 120 அடியில் நேற்று காலை நிலவரப்படி 117.610 அடியை எட்டிவிட்டது. இதையடுத்து உபரி நீர் காவிரியில் எந்த நேரமும் திறக்கப்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

பவானி ஆற்றில் ஏற்கனவே வரும் 10 ஆயிரம் கனஅடியோடு காவிரியில் வரும் உபரி நீரும் சேர்ந்தால் கரையோரப்பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிடும் என்பதால் ஈரோட்டில் கருங்கல்பாளையத்தில் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு நேற்று இரவு வெள்ள அபாய எச்சரிக்கை தண்டோர மூலம் விடுக்கப்பட்டது.

கரையோரத்தில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்மாறு வருவாய்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. மேலும் மக்களை தங்க வைக்க சமுதாய கூடங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். https://www.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/