ஈரோடு அக்.16:
விற்பனை கூடங்களுக்கு கொண்டு வரும் சாக்குபைகளுக்கு கூடுதலாக பணம் வழங்கவேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க மாநிலதலைவர் சுதந்திரராசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் தங்களது விளை பொருட்களை ஒழுங்கு முறை விற்பனை கூடம், கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். விவசாயிகள் விற்பனை கூடங்களுக்கு கொண்டு வரும் கொப்பரை தேங்காய், மஞ்சள், எள், நிலக்கடலை உள்ளிட்ட அனைத்து வகையான பொருட்களையும் சணல் பையில் கொண்டுவருகின்றனர்.
கடந்த 2005ம் ஆண்டு ஒரு சணல் பைக்கு ரூ.10 விவசாயிகளுக்கு விற்பனை கூடங்கள் வழங்கியது. 16 ஆண்டுகளாக இதே கட்டணம் வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது ஒரு சாக்கு பை ரூ.40 முதல் 50 ரூபாய் கொடுத்து கடைகளில் வாங்கி, விளை பொருட்களை வைத்து விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இதனால் ஒரு மூட்டைக்கு ரூ.30 முதல், 40 வரை விவசாயிக்கு இழப்பு ஏற்படுகிறது. எனவே விவசாயிகள் நலன் கருதி, ஒரு சணல் பைக்கு ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் ரூ.30 என்ற விலை நிர்ணயிக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.https://www.tn.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/