ஈரோடு செப் 24:

ஈரோடு மாவட்ட சிறுதொழில்கள் சங்கம் எனப்படும் ஈடிசியாவில் மாவட்ட தொழில் மையம், வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் சார்பில் ஏற்றுமதி வழிகாட்டுதல் கருத்தரங்கு நடந்தது.

மாவட்ட தொழில் மைய மேலாளர் திருமுருகன் வரவேற்றார். வெளிநாட்டு வர்த்தக இயக்குனரக துணை இயக்குனர் சுகன்யா, மாவட்ட வங்கி மேலாளர் ஆனந்தகுமார் உட்பட பலர் பேசினர். ஏற்றுமதி தொழிலை அதிகரிக்க வங்கிகள் தேவையான கடனுதவிகள் வழங்குகிறது. மாவட்ட தொழில் மையம் மூலம் பல்வேறு திட்டங்களின் கீழ் கடனுதவி பெற்றுத்தரப்படுகிறது. ஏற்றுமதிக்கு தேவையான தளங்கள், வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும், என யோசனை தெரிவித்தனர். பல்வேறு திட்டங்கள் குறித்த துண்டு அறிக்கைகள் வழங்கப்பட்டது. பல்வேறு நிறுவனங்கள் சார்பில் கண்காட்சி அமைத்து, ஏற்றுமதி குறித்த விளக்கங்கள் அளித்தனர்.

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/