ஈரோடு அக் 30:
ஈரோடு அரசு அருங்காட்சியகம் சார்பில் நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர போராட்டத்தில் பங்குபெற்ற தியாகிகளை நினைவு கூறும் வகையில், மாதந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு போட்டிகள், கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற பெண்களை கவுரவப்படுத்தும் வகையிலும், மாணவ, மாணவியர்கள் தெரிந்து கொள்ளும் வகையிலும் வேலுநாச்சியார், டாக்டர் முத்துலட்சுமிரெட்டி, தில்லையாடி வள்ளியம்மை, மூவலூர் ராமாமிர்தம் உள்ளிட்ட 18 தமிழ் பெண்களின் புகைப்பட கண்காட்சி மற்றும் அவர்களை பற்றிய விளக்கங்கள் அடங்கிய கண்காட்சி நேற்று தொடங்கியது. இக்கண்காட்சி வருகின்ற 15ம் தேதி வரை நடைபெறும் என்று அருங்காட்சியக காப்பாட்சியர் ஜென்சி கூறினார். https://www.tn.gov.in ,https://www.erode.nic.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/