ஈரோடு, நவ. 29:

ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் மாநில அளவிலான இரண்டு நாள் ஐவர் கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது. ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நேற்று துவங்கியது. இந்த போட்டிக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஈரோடு எஸ்.பி., சசிமோகன் கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்தார்.

இதில், ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கால்பந்தாட்ட வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்டினர். இதேபோல், இன்று பெண்கள் அணியினர் பங்கேற்கும் கால்பந்தாட்ட போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு இன்று மாலை பரிசளிப்பு விழா நடைபெற உள்ளதாக விளையாட்டு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. https://www.sdat.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/