ஈரோடு டிச 1:
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் கனி மார்க்கெட் (ஜவுளி சந்தை) செயல்பட்டு வருகிறது. திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை ஜவுளி சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த ஜவுளி சந்தையானது உலகப் புகழ் பெற்றது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கோவா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து துணிகளைக் மொத்தமாக கொள்முதல் செய்து செல்வார்கள்.
குழந்தைகள் முதல் முதியவர்கள் அனைவருக்கும் அனைத்து ரக துணிகளும் குறைந்த விலையில் கிடைப்பதால் ஜவுளி சந்தை கூடும் நாட்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருக்கும். கொரோனா தாக்கத்திற்கு பிறகு ஜவுளி சந்தை வியாபாரம் முடங்கியது. தற்போது ஓரளவு அதிலிருந்து மீண்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருவதால் வெளிமாநில வியாபாரிகள், உள் மாவட்ட வியாபாரிகள் ஜவுளி சந்தைக்கு வருவதில்லை. இதனால் இன்று கூடிய ஜவுளி சந்தை வியாபாரிகள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. வியாபாரம் மந்த நிலையிலேயே நடந்தது. மொத்த வியாபாரம் அடியோடு பாதிக்கப்பட்டது. சில்லறை வியாபாரம் பேரளவிலேயே நடந்தது.
இதுகுறித்து ஜவுளி வியாபாரிகள் கூறும்போது, தற்போது மழை தீவிரமாக பெய்து வருவதால் கடந்த சில நாட்களாக ஜவுளி வாரச்சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை. இதேபோல் மாவட்ட வியாபாரிகளும் வரவில்லை. இதனால் வியாபாரம் மந்த நிலையிலேயே நடந்து வருகிறது. இன்று சில்லரை வியாபாரம் வெறும் 20 சதவீதம் மட்டுமே நடைபெற்றது. இன்னும் 2 வாரம் இதே போன்று தான் இருக்கும். இந்த மாத இறுதியில் கிறிஸ்துமஸ் புத்தாண்டு பண்டிகை வருவதால் வியாபாரம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கிறோம், என்றனர். https://www.texmin.nic.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/