ஈரோடு நவ 24:

நூல் விலை உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஈரோடு ஜவுளி உற்பத்தியாளர்கள் மனு அனுப்பி உள்ளனர். இது தொடர்பாக ஈரோடு பவர்லூம் கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் தலைவர் திருநாவுக்கரசு மற்றும் நிர்வாகிகள் பிரதமர் மோடி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது.

கடந்த சில மாதங்களாக ஜவுளித் தொழிலின் மூலப்பொருளாகிய நூல் விலை கடுமையாக உயர்ந்து கொண்டு வருகின்றது. இதே போல ஜவுளியின் உப தொழில்களான பிளீச்சிங், டையிங், பிரிண்ட்டிங், கெமிக்கல் உள்ளிட்டவைகளின் விலையும் உயர்ந்து கொண்டு வருகின்றது. இதனால் ஜவுளி அடக்க விலை உயர்ந்துவிட்டது. மேலும் மாசுகட்டுப்பாடு வாரியத்தின் நடவடிக்கைகளால் சாய, சலவை தொழிற்சாலைகளும் மூடப்பட்டு வருகின்றன.

இதனால் ஜவுளித்தொழிலை நம்பி வாழும் லட்சக்கணக்கான குடும்பங்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். எனவே ஒன்றிய அரசு உடனடியாக நூல் விலை உயர்வை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு, பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைத்துக்கொடுத்து ஜவுளித்தொழிலை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. https://www.texmin.nic.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/