ஈரோடு ஆக 14:
சுதந்திர தினவிழாவை முன்னிட்டு ஈரோடு ரயில் நிலையத்தில் பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டு வருகின்றது. சுதந்திர தின விழா நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மாநில, மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஈரோடு வழியாக செல்லும் ரயில்களில் போலீசார் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதே போல் ஈரோடு ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரயில்நிலைய வளாகம், வழித்தடங்கள், காவிரி பாலம் ஆகிய இடங்களில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில்களில் பயணிகளின் உடைமைகளை போலீசார் மெட்டல் டிடெக்டர் மூலமாக கண்காணிப்பதோடு, ரயில் நிலையத்தின் நுழைவு வாயிலில் பயணிகளின் உடைமைகளை போலீசார் சோதனைக்கு பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர். தவிர, காவிரி ஆற்று பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today