ஈரோடு நவ 26:

ஈரோடு மாநகராட்சி ஆணையாளராக கடந்த 2019ம் ஆண்டு இளங்கோவன் பொறுப்பேற்றார். கொரோனா காலகட்டத்தில் மாநகர் பகுதியில் கொரோனா தாக்கம் குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். பல்வேறு திட்டங்களையும் கொண்டு வந்து அதை செயல்படுத்தினார்.

இந்நிலையில் இளங்கோவன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சியின் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஈரோடு மாநகராட்சியின் புதிய ஆணையாளராக ஆவடி நகராட்சி இணை இயக்குனர் (நிர்வாகம்) சிவகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். நாளை சிவகுமார் ஈரோடு மாநகராட்சியின் புதிய ஆணையாளராக பதவி ஏற்க உள்ளார். பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள இளங்கோவனுக்கு அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். https://www.tnurbantree.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/