ஈரோடு ஆக 25:

கேங்மேன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பணி நியமனம் செய்யக்கோரி ஈரோட்டில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு ஈ.வி.என்., சாலையில் உள்ள மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் (சி.ஐ.டி.யு.,) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு அச்சங்க தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். சிஐடியு மண்டல செயலாளர் ஜோதி மணி, மாவட்ட துணை தலைவர் ரகுநாதன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.இதில், முத்தரப்பு ஒப்பந்தபடி கேங்மேன் பயிற்சி காலத்தை 3 மாதமாக குறைத்திட வேண்டும். கேங்மேன் தொழிலாளர்களின் தொகுப்பூதியத்தை காலமுறை ஊதியமாக மாற்றி வழங்க வேண்டும்.

கல்வித்தகுதிக்கேற்ப பதவி மாற்றம் பெறுவதற்கான உள்முக தேர்வில் பங்கேற்க அனுமதி வழங்கிட வேண்டும்.சொந்த மாவட்டத்திற்கே பணியிட மாறுதல் உத்தரவு வழங்க வேண்டும். கேங்மேன் பணி நியமன தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனம் வழங்கப்படாத 5ஆயிரம் பேருக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும். பணி பாதுகாப்பு, தொழில் நுட்ப பயிற்சிகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மின் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today