புஞ்சை புளியம்பட்டி 16:

ஆசனுார் அருகே வனப்பகுதி வழியாக வந்த லாரியை குட்டியுடன்வந்த யானைகள் வழிமறித்து கரும்பை ருசித்தன. ஈரோடு மாவட்டம் பண்ணாரி வனப்பகுத துவங்கி தமிழக – கர்நாடக எல்லை வரை பெரும்பாலான பகுதி அடர் வனமாக உள்ளன. வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் யானைகள் அதிகமாக உலா வருகின்றன. நேற்று காலை ஆசனுார் வனப்பகுதியில் குட்டியுடன் வெளியே வந்த யானைகள், சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே நடமாடியது. யானைகள் சாலைகளில் நடமாடுவதை கண்டன வாகன ஓட்டிகள், வாகனத்தை சாலையின் ஓரமாக நிறுத்தினர். வாகன வரிசையில் நிறுத்தப்பட்டிருந்த கரும்பு யானையை பார்த்த யானையும், குட்டிகளும் தும்பிக்கையால் கரும்பை பறித்து ருசித்தன. சில கட்டு கரும்பை ருசித்த யானை கூட்டம், சிறிது நேரத்தில் தானாக சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்றன. அதன் பின் 150க்கும் மேற்பட்ட வாகனங்கள் அப்பகுதியை கடந்து சென்றன.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.today