பவானிசாகர் செப் 28: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான யானைகள், புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன.

இந்நிலையில் பவானிசாகர் வனப்பகுதியில் இருந்து, பவானிசாகர் அணைக்கு நீர் அருந்துவதற்காக யானைகள் வருவது வழக்கம். இதேபோல் நேற்றிரவு பவானிசாகர் அணையின் மேல் பகுதிக்கு வந்த யானை கூட்டம் வாய்க்கால் வழியாக பவானிசாகர் அணை பூங்காவில் நுழைந்தது.

பிறகு பூங்காவில் இருந்து வெளியே வர வழி தெரியாமல் பூங்காவின் சுற்றுச்சுவர் மற்றும் பூங்காவின் இரும்புக் கதவுகளை சேதப்படுத்தி வெளியேறியது. இதனால் பூங்காவில் இருக்கும் இரவு நேர பொதுப்பணித்துறை பணியாளர்கள் அலறியடித்து வெளியே ஓடினர். மொத்தம் நான்கு இடங்களில் சுற்றுச்சுவர் மற்றும் இரும்புக்கதவுகளை துவம்சம் செய்தது.பிறகு பவானிசாகர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். யானை பூங்காவில் நுழையாதவாறு வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/