ஈரோடு அக் 30:
தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் வருகின்ற நவ., 1ம் தேதி திறக்கப்பட உள்ளதையடுத்து மாவட்டத்தில் உள்ள 1,287 பள்ளிகளில் தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மாணவ, மாணவிகளின் கல்வி திறன் பாதிக்காத வகையில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் கொரோனா தாக்கம் கடந்த சில நாட்களாக குறைந்து வருவதையடுத்து கொரோனா கட்டுப்பாடிகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வருகின்ற நவ., 1ம் தேதி முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. பள்ளிகள் திறக்க இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தில் 1,287 அரசு தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தொடக்கப்பள்ளிகள் ஓராண்டுக்கும் மேலாக திறக்கப்படாமல் உள்ளதால் பள்ளி வளாகத்தில் புதர்கள் மண்டி கிடக்கின்றது. இதையடுத்து புதர்கள், செடி, கொடிகள் அகற்றும் பணி நடைபெற்று வருகின்றது. பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருகின்றது. மாணவர்கள் பயன்பாட்டிற்கான குடிநீர் தொட்டியில் உட்புறம் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது. மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்வதற்கான தெர்மல் ஸ்கேனர், முகக்கவசம் உள்ளிட்டவைகள் தேவையான அளவு பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.tnschools.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/