ஈரோடு டிச 13:
ஈரோடு மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தன்னார்வலர்களாக பணியாற்ற 10 ஆயிரத்து 615 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களில் 1,725 பேருக்கு முதல் கட்ட நேர்முக தேர்வு நடத்தப்பட்டு 738 பேர் தேர்ந்து எடுக்கப்பட்டனர். அவர்கள் மாவட்டம் முழுவதும் 535 மையங்களில் மாலை நேர வகுப்புகள் எடுத்து வருகிறார்கள்.
இந்தநிலையில் தன்னார்வலர்களாக விண்ணப்பித்தவர்களின் விவரம் சரிபார்க்கும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. அந்தந்த பகுதி அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள் செல்போன் செயலி மூலம் இந்த பணியை மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து 2-வது கட்ட நேர்முகத்தேர்வு நேற்று நடந்தது.
ஈரோட்டில் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி, வீரப்பன்சத்திரம் எம்.ஆர்.ஜி. மகளிர் மேல்நிலைப்பள்ளி, குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, சித்தோடு அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிக்கூடங்களில் நேர்முகத்தேர்வு நடந்தது. தன்னார்வலர்கள் பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். கணினி மூலம் கேள்வி பதில் தேர்வாக இது நடத்தப்பட்டது. https://www.tnschools.tn.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today