ஈரோடு சூலை 20:

ஈரோடு மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன், தமிழ்நாடு மின்வாரிய பணியாளர்கள் சங்கம் சார்பில் மண்டல செயலாளர் ஜோதிமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய மின்சார திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். இதன் மூலம் விவசாயிகள், விசைத்தறியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர், பொதுமக்கள் பாதிப்பு அடைவார்கள். எனவே, அச்சட்டத்தை நிறைவேற்றக்கூடாது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒன்றுபட்ட மின்வாரியங்களை சிறு, சிறு துண்டுகளாக்கி மின்சார வினியோகத்தை தனியார் மயமாக்கும் போக்கை கைவிட வேண்டும். மின் கட்டண உயர்வு, விவசாயிகளுக்கான இலவச மின்சாரம், பொதுமக்கள், தொழில் துறையினருக்கான மின்சார சலுகைகளை பறிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.today