ஈரோடு டிச 14:

அவுட் சோர்சிங் முறையை கைவிட்டு நேரடியாக பணி நியமனம் செய்ய வேண்டும் என்று அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டிரைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழ்நாடு மருத்துவமனை ஊர்தி ஓட்டுநர், பணியாளர்கள் சங்கம் (ஏ.ஐ.டி.யு.சி.,) பொதுக்குழு கூட்டம் சித்தோட்டில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு சங்க துணைத்தலைவர் பிரபு தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் சின்னசாமி, பொதுச் செயலாளர் ருத்ர கோட்டீஸ்வரன், மாவட்டக்குழு உறுப்பினர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்,  தமிழ்நாட்டில் உள்ள அரசு

மருத்துவமனைகளில் அமரர் ஊர்திகள் மற்றும் தாய் சேய் நல ஊர்தி ஓட்டுநர்கள், பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும், அவுட் சோர்சிங் மற்றும் பிக்சட் டேர்ம் எம்ப்ளாய்மெண்ட தொழிலாளர் முறையை கைவிட்டு, அரசு மருத்துவமனைகளில் நேரடி பணியாளர்களாக்கி பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.

பணியாளர்களை அவரவர்  சொந்த மாவட்டங்களில் பணி அமர்த்த வேண்டும். அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அமரர் ஊர்தி தாய் சேய் நல ஊர்தி ஓட்டுநர் பணியாளர்களுக்கு நிலையாணை விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும், ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். பணியிட மாறுதல் நடவடிக்கைகளை கைவிடவேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. https://www.tnsta.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today