ஈரோடு டிச 17:
மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி இனங்களை செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் சொத்துவரி, காலி மனை வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவைகளை வசூல் செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகராட்சி மண்டலம் 2க்கு உட்பட்ட பகுதிகளில் வரி வசூல் செய்வதற்காக தனி குழுக்கள் அமைக்கப்பட்டு வரி வசூல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று காலை 24வது வார்டுக்குட்பட்ட அவ்வையார் வீதியில் உதவி ஆணையாளர் விஜயகுமார் தலைமையில் அதிகாரிகள் வீடு வீடாக சென்று வரி செலுத்தாமல் உள்ள வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கினர். உரிய காலத்திற்குள் வரி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்று எச்சரித்தனர். https://www.tnurbantree.tn.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today