ஈரோடு அக் 11:

இந்திய மருத்துவ சங்கம் தமிழ்நாடு மாநில கிளை தலைவர் பதவிக்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு ஈரோட்டை சேர்ந்த டாக்டர் கே.எம்.அபுல்ஹசன் போட்டியிட்டார். அவர் இந்த தேர்தலில் அதிக டாக்டர்களின் வாக்குகளை பெற்று வெற்றி பெற்று உள்ளார்.

இந்திய மருத்துவ சங்கம் தமிழ்நாடு மாநில கிளைக்கு 2023-–2024-ம் ஆண்டுக்கான தலைவராக டாக்டர் கே.எம்.அபுல்ஹசன் செயல்படுவார். ஈரோட்டில் சிட்டி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனராக உள்ள டாக்டர் கே.எம்.அபுல்ஹசன் பொது சேவையில் அதிக ஈடுபாடு கொண்டவர். ஈரோடு கங்காபுரம் இமயம் புற்றுநோய் மையத்தின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்த புற்றுநோய் மையம் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் திறந்து வைத்த பெருமைக்கு உரியதாகும்.

ஒளிரும் ஈரோடு அமைப்பின் சுகாதார பிரிவு தலைவராக இருந்து வளர் இளம் குழந்தைகளின் ஊட்டசத்துக்கு குறைபாட்டினை போக்க சிறப்பு வாட்ட -சாட்ட உணவை அறிமுகப்படுத்தியவர். கொரோனா காலத்தில் இலவச மருத்துவ மையத்தை பொறுப்பு ஏற்று நடத்தியவர். தற்போது இந்திய மருத்துவ சங்கத்தின் இளம் மருத்துவர் அமைப்பின் தேசிய தலைவராக பதவியில் உள்ளார். தமிழ்நாடு தலைவராக தேர்வு பெற்ற டாக்டர் கே.எம்.அபுல்ஹசனுக்கு சக டாக்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/