ஈரோடு ஆக 9:

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி தி.மு.க., சார்பில் இன்று ஈரோட்டில் கருணாநிதி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 3ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் நடைபெற்ற ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தி.மு.க., சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் கந்தசாமி தலைமை வகித்து, கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின், முனிசிபல் காலனியில் உள்ள கருணாநிதி சிலைக்கு துணை பொது செயலாளர் எம்.பி., அந்தியூர் செல்வராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், மாவட்ட அவைத்தலைவர் குமார்முருகேஷ், மாவட்ட துணை செயலாளர் சின்னனையன், மாவட்ட பொருளாளர் பழனிசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் குமாரசாமி, மைவிழி முருகேசன், பகுதி செயலாளர் அக்னி சந்துரு,  உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதே போல வீதிகள் தோறும் ஆங்காங்கே கருணாநிதி திருவுருவ படம் வைத்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதே போல பல்வேறு பகுதிகளில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்களில் கட்சி நிர்வாகிகள் சார்பில் உணவு வழங்கப்பட்டது.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today