ஈரோடு சூலை 11:

ஈரோடு மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை தூய்மையாக பராமரிப்பதோடு, கழிப்பறை வசதி அவசியம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.டாஸ்மாக் நிறுவனத்தின் ஈரோடு மாவட்ட மேலாளர் மணிமொழி அனைத்து கடைகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,டாஸ்மாக் மதுபான கடையின் உட்புறம் மற்றும் வெளிப்புற சுவர்களில் வெள்ளை அடித்து கடையை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். மதுபான பாட்டில்களில் உள்ள லேபிள்களை கடையின் முகப்பு பகுதியில் ஒட்டக்கூடாது. கட்டிட உரிமையாளர் உதவியுடன் கிரில் கேட்டிற்கு பெயிண்ட் அடிக்க வேண்டும்.கடையின் அருகே தேவை இல்லாத பொருட்களை அப்புறப்படுத்தி தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இந்த விதிமுறைகளை பின்பற்றாத கடைப்பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இதே போல ஒவ்வொரு கடையிலும் கழிப்பறை வசதிகள் செய்திருக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செய்தி நிருபர் ஈரோடு டுடே

https://www:erode.today