ஈரோடு ஆக 11:

ஈரோடு மாவட்ட யோகாசன சங்கம் மற்றும் அகஸ்தியா தற்காப்பு கலை பயிற்சி இணைந்து கோபி அடுத்துள்ள அளுக்குளி ஆனந்தபாபா கோயில் மண்டபத்தில் மாவட்ட அளவிலான யோகாசனா போட்டிகள் வருகின்ற 22ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியானது 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடைபெற உள்ளது.

மாவட்ட அளவிலான போட்டியில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் மட்டும் கலந்து கொள்ள முடியும். மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் முதல் 3 இடங்களை பெறுவோர் மதுரையில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கலாம். மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவியர்கள் டெல்லியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க விரும்புவர்கள் வருகின்ற 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஈரோடு மாவட்ட யோகாசன சங்க செயலாளர் குணசேகரன் தெரிவித்துள்ளார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today