ஈரோடு சூலை 29:

 ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் குழு கூட்டம் உணவு பாதுகாப்பு துறை மூலம் கலெக்டர் எச்.கிருஷ்ணஷண்ணி தலைமையில் நடந்தது. தமிழக அரசு தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா, பான் மசாலா, புகையிலை பொருட்கள் போன்றவைகளை விற்பனை செய்தல், குடோன், கடைகளில் பதுக்கி வைத்திருத்தல், எடுத்து செல்லுதல் போன்றவை கூடாது. அவ்வாறு வைத்திருக்கும்போது பிடிபடும் நபர்கள் மீதும், அக்கடை அல்லது நிறுவனம், குடோன் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து கலெக்டர் விளக்கினார். இதுபோன்ற தடை செய்யப்பட்ட பொருட்களின் வருகை, விற்பனையை முற்றிலும் தடுக்க உத்தரவிடப்பட்டது. உதவி கலெக்டர் – பயிற்சி ஏகம் ஜெ.சிங், மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக பிரிவு நியமன அலுவலர் தங்கவிக்னேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today