பெருந்துறை டிச 20:

ஈரோடு மாவட்ட கபாடி ஒருங்கிணைப்பு குழு நடத்தும் மாவட்ட அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் கபாடி போட்டி பெருந்துறை ஸ்ரீமஹால் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது.

ஈரோடு மாவட்ட கபாடி ஒருங்கிணைப்பு குழு நடத்தும் மாவட்ட அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் கபாடி போட்டியை ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இ.திருமகன் ஈவெரா குத்துவிளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைத்தார்.

முன்னாள் தமிழ்நாடு மாநில கபாடி கழக செயலாளரும், முன்னாள் அகில இந்திய அமெச்சூர் கபாடி கழக இணை செயலாளருமான என்.சுப்பிரமணியன், சத்தியமங்கலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.சுப்பிரமணியம், தி.மு.க. நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம், மாவட்ட கபாடி வீரரும்

பொறுப்பாளருமான இளங்கதிர் அன்பு, ஈரோடு மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆர்.சதீஷ்குமார், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.பி.ரவி, மாவட்ட துணை தலைவர் ராஜேஷ் ராஜப்பா, மண்டல காங்கிரஸ் தலைவர் விஜயபாஸ்கர், குப்பண்ணா சந்துரு, சிவா என்கிற சிவக்குமார், டிட்டோ, செந்தூர் ராஜகோபால், மொடக்குறிச்சி வட்டார காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் செந்தில்ராஜா,  திண்டல் பாலாஜி, தம்பி கார்த்தி மற்றும் பலர் கலந்துக் கொண்டனர். https://www.sdat.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today