ஈரோடு அக்.18:

ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சின்னச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஈரோடு மாவட்டத்தில் உணவு தானிய உற்பத்தி இலக்கு 3 லட்சத்து 10 ஆயிரம் மெட்ரிக்டன் ஆகும். இதில் பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் மற்றும் கீழ்பவானி வாய்க்கால் மூலம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகளுக்கு சான்று விதைகள் உற்பத்தி செய்து வழங்கிட சத்தியமங்கலம், பவானி மற்றும் பவானிசாகர் ஆகிய மூன்று இடங்களில் அரசு விதைப்பண்ணைகள் உள்ளன. சத்தியமங்கலம் மாநில அரசு விதைப்பண்ணையில் 33 ஏக்கர் பரப்பில் சான்று விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நெல் ரகங்கள் ஏ.எஸ்.டி.16, டி.பி.எஸ்.5, கோ50, கோ51 ஆகியவை 17 ஏக்கர் பரப்பிலும், வீரிய மக்காச்சோளம் கோ.எச்.எம்.8 2 ஏக்கர் பரப்பிலும், உளுந்து வி.பி.என்.8 ரகம் 8 ஏக்கர் பரப்பிலும் மற்றும் தட்டைபயறு கோ.சி.பி.7 ரகம் 3 ஏக்கர் பரப்பிலும் பயிரிடப்பட்டுள்ளது. இயற்கை வேளாண்மை முறையில் மருத்துவ குணங்கள் மிகுந்த உடலுக்கு ஆரோக்கியம் பெருக்கும் பாரம்பரிய நெல் ரக விதை நெல்களை விவசாயிகளுக்கு அரசு விதைப்பண்ணைகள் மூலம் உற்பத்தி செய்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி பாரம்பரிய நெல் ரகம் அறுபதாம் குறுவை 3 ஏக்கர் பரப்பில் நடவுதுவக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. https://www.tn.gov.in

ReplyForward

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/