ஈரோடு ஆக 12:

ஈரோடு ரயில் நிலைய வளாகத்தில் இன்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. உதவித் தலைவர் ராஜூ தலைமை தாங்கினார்.

மாவட்ட குழு உறுப்பினர் அம்மணி அம்மாள், மாவட்ட உதவித் தலைவர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி வந்த ரயில் கட்டண சலுகைகளை பறிக்கக்கூடாது. ரயில் நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது.

ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் கட்டணம் வசூலிக்கக் கூடாது. புதுச்சேரி, சண்டிகார் மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் மானியம் வழங்குவது போல், தமிழ்நாட்டிலும் வழங்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் தாலுகா ஒன்றிய அளவில் முகாம் நடத்தி அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செந்தில்குமார் நன்றி கூறினார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today