ஈரோடு சூலை 24:

ஈரோடு சூரம்பட்டி நான்கு ரோட்டில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சுப்பிரமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பாதுகாப்பு துறை உற்பத்தியை தனியார்யிடம் வழங்கக்கூடாது. அத்யாவசிய பாதுகாப்பு சேவை அவசர சட்டத்தை திரும்ப பெற வேண்டும். மின்சார திருத்த சட்டம், புதிய வேளாண் திருத்த சட்டம், தொழிலாளர் நலச்சட்ட திருத்தங்களை வாபஸ் பெற வேண்டும். ரயில்வே, வங்கி, காப்பீடு, சுரங்கம் போன்ற நிறுவனங்களை தனியாருக்கு வழங்கக்கூடாது என வலியுறுத்தினர். ஐ.என்.டி.யு.சி., மாவட்ட தலைவர் தங்கராஜ், ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலாளர் சின்னசாமி, தொ.மு.ச., மாவட்ட செயலாளர் கோபால், பிற சங்கங்களை சேர்ந்த கனகராஜ், சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.today