ஈரோடு ஆக 2:
ஈரோடு, சூரம்பட்டி நான்கு ரோட்டில் அனைத்து கட்சிகள் சார்பில் ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கியூபா மீதான பொருளாதார தடையை நீக்க வேண்டும். கியூபாவில் நடக்கும் கலவரத்தை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் உதவ வேண்டும். அதேநேரம், அந்நாட்டு கலவரத்தை துாண்டும் செயல்களை பிற நாடுகள் கைவிட வேண்டும். ஐ.நா., தீர்மானத்தை மதித்து நடக்கவும், அங்குள்ள சாதாரண மக்களுக்கு உணவு உள்ளிட்டவை கிடைக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும், என வலியுறுத்தினர். ஈரோடு மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு, மாரிமுத்து, சி.ஐ.டி.யு., சுந்தர்ராஜன், தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணை தலைவர் துளசிமணி, பி.யூ.சி.எல்., தலைவர் கணகுறிஞ்சி உட்பட பலர் பங்கேற்றனர்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today