ஈரோடு ஜூன் 16: ஈரோடு மத்திய மாவட்ட தமிழ் புலிகள் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.மாவட்ட செயலாளர் இரா.சிந்தனைசெல்வன் தலைமை தாங்கினார்.

பெட்ரோல், டீசல் விலை ஒரு லிட்டர் 100 ரூபாயை தாண்டிவிட்டது. காஸ் சிலிண்டர் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. காஸ் சிலிண்டருக்கான மானியம் நிறுத்தப்பட்டு வருகிறது. இவற்றின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

ஈரோடு மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.அவற்றை சமூக வலை தளங்களில் பதிவு செய்தனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே