ஈரோடு சூலை 6:
அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்டோ தொழிலாளர் யூனியன் சி.ஐ.டி.யு., சார்பில், ஈரோடு தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார்.
பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி. வரி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மோட்டார் தொழிலாளர் வாழ்வாதாரம் பாதுகாக்க மாதம் ரூ.7 ஆயிரத்து 500-ம், நடப்பு ஆண்டு முழுவதும் இலவச உணவு தானியங்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், பொதுச் செயலாளர் ஜான்சன் கென்னடி, பொருளாளர் ஸ்ரீதர், அரசு போக்குவரத்து ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மாரபபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே