ஈரோடு ஆக 30: ஈரோடு வ.உ.சி., பூங்காவுக்குள்  சுற்றுச்சுவர் சுற்றி எழுப்பப்பட்டுள்ளது.

இதில் நடைபயிற்சி செல்லும் பகுதியில் உள்ள சுற்று சுவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவில் திடீரென இடிந்து விழுந்தது.இரவில் இடிந்து விழுந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தற்போது வரை அந்த சுவர் சிரமைக்கப்படாமல் அப்படியே உள்ளது. மேலும் அருகிலுள்ள சுவரும் இடிந்து விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் அந்த பகுதியை கடந்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் முட்புதர்கள் நிறைந்து காணப்படுகிறது.

இதன் மூலம் விஷ பூச்சிகள்  பூங்காவிற்குள் வரவும் வாய்ப்புள்ளது.எனவே இடிந்து விழுந்த சுவரை அகற்றிவிட்டு அந்த பகுதியில் புதிய சுவரை எழுப்ப வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி நிருபர் ஈரோடு ‍டுடெ
https://www.erode.today/