ஈரோடு ஆக 3: சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 216வது நினைவு நாளையொட்டி அரசு சார்பில் அமைச்சர் முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அரச்சலூர் பேரூராட்சி, ஓடாநிலையில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் நிகழ்ச்சி ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று தீரன் சின்னமலையின் 216வது நினைவு நாள் நேற்று  அனுசரிக்கப்பட்டது.

தீரன் சின்னமலை மணி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் குறிஞ்சி சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வீட்டு வசதித்துறை சு.முத்துசாமி, சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலா்தூவி மரியாதை செலுத்தினார். இதைத்தொடா்ந்து ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, மாநிலங்களவை உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் தீரன் சின்னமலையின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலா்தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் பயிற்சி ஆட்சியர் ஏகம்.ஜெ.சிங், ஏ.டி.எஸ்.பி., பொன் கார்த்திக், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து முன்னாள் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், கருப்பணன், கே.வி.ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் தென்னரசு, சிவசுப்பிரமணி, முன்னாள் எம்.பி.,க்கள் செல்வகுமாரசின்னையன், சத்தியபாமா உட்பட பலர் பங்கேற்றனர்.மேலும் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்தனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today