ஈரோடு டிச 3:
ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால் நெற்பயிர்கள் சாய்ந்து பாதிப்படைந்துள்ளது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. ஈரோடு மாவட்டத்தில் சராசரி அளவை விட மழைப்பொழிவு இருந்த வந்த போதிலும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
இந்நிலையில் நேற்று மாலை ஈரோடு உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் காலிங்கராயன் வாய்க்கால் பாசன பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் அடியோடு சாய்ந்து பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதே நிலையில் தொடர்ந்து மழை பெய்தால் பயிர்கள் நோய் தாக்குதலால் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இன்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பெய்த மழையளவு விபரம், ஈரோடு 58 மில்லிமீட்டர், பவானி 5.2, சத்தி 10, பவானிசாகர் 3, மொடக்குறிச்சி 10, கவுந்தப்பாடி 15.2, கொடிவேரி 4.2, குண்டேரிப்பள்ளம் 17மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டத்தின் சராசரி மழையளவு 8.54 மில்லிமீட்டர் ஆகும். https://www.tnagrisne.tn.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/