ஈரோடு நவ 27:

கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு கடன் வழங்க வசதியாக வங்கிகள் மூலம் கடன் அட்டை வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.

ஈரோடு மாவட்டத்தில் கால்நடை வளர்போரின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த கால்நடை வளர்க்கும் 10 ஆயிரத்து 320 விவசாயிகளுக்கு மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் வங்கிகளில் மூலம் கால்நடை பராமரிப்புக்காக கிசான் கிரெடிட் கார்டு வழங்கி, கடன் உதவி செய்யப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள் பயன்பெற மாவட்ட அளவிலான சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் இச்சிறப்பு முகாம்களில் விண்ணப்பங்களை சமர்பிக்க, ஈரோடு மாவட்டத்தின் அனைத்து கால்நடை மருந்தகங்களிலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.

எனவே கிசான் கடன் அட்டை திட்டத்தின் மூலம் பயன் பெற ஆர்வமுள்ள கால்நடை வளர்ப்போர் தங்களது ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக முன்பக்க நகல், சமீபத்தில் எடுக்கப்பட்ட 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மற்றும் நில ஆவணங்கள் ஆகிய ஆவணங்களின் நகலுடன், அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களில் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து 2 நகலில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. https://www.pmkisan.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/