ஈரோடு டிச 17:

பெண்களின் திருமண வயது 21 என்றும் உயர்த்தும் மத்திய அரசுக்கு அறிவிப்புக்கு நன்றி தெரிவிப்பதாக கொ.ம.தே.க., செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. ஈரோட்டில் இருந்து கொ.ம.தே.க., பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியது:

பெண்களின் திருமண வயது 18 ல் இருந்து 21 வயது என்று உயர்த்த வேண்டும் என கொ.ம.தே.க., சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். ஆண்களும், பெண்களும் சமம் என்ற சூழ்நிலையில், இருவரது திருமண வயது வரம்பு சட்டத்தை சமமாக்க வேண்டும் என வலியுறுத்தினோம். அப்போதுதான், தனது வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் பக்குவம் பெண்ணுக்கு வரும்.

அவ்வாறு இன்றி பல தவறான முடிவுகள் எடுக்கவும், பிரச்னைகளை சந்திக்க வயதும் காரணமானது. திருமண வயது 18 என்பது பெண் குழந்தைகளுக்கு எதிராக குற்றம் புரிபவர்களுக்கு உதவியாக இருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், திருமண வயதை 21 என மத்திய அரசு உயர்த்துவது வரவேற்புக்குரியது. வாக்களித்து தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் சரி இல்லை என்றால், ஐந்தாண்டில் மாற்றும் வாய்ப்புள்ளது.

கணவரை தேர்வு செய்தால், மாற்ற முடியுமா என்ற நிலையில் 21 வயதில் அவர்கள் பக்குவமடைவார்கள். இந்த வயது உயர்வு, குடும்பத்துக்கும், நாட்டுக்கும் நல்லதாகும். பெண்கள், பல குடும்பங்கள் சந்திக்கும் பல பிரச்னைகளுக்கு இது தீர்வாகும். வெகு விரைவில் பார்லிமென்ட்டின் இரு அவைகளிலும் இம்மசோதாவை நிறைவேற்றி சட்ட திருத்தம் கொண்டு வர அனைவரும் ஒத்துழைக்க வேண்டும், என கேட்டு கொண்டார். https://www.tndalu.ac.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today