ஈரோடு ஆக 24:

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நோய் தடுப்பு பணியில் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டு வருகிறது. அதேசமயம் மக்களை தொற்றில் இருந்து பாதுகாக்க கொரோனா தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

கோவேக்சின், கோவிசிஷீல்டு தடுப்பூசிகள் கையிருப்பு தகுந்தாற்போல் போடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் இன்று ஈரோடு, மொடக்குறிச்சி கொடுமுடி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, சத்தியமங்கலம், தாளவாடி, நம்பியூர் ஆகிய பத்து தாலுகாக்களில் 177 இடங்களிலும், ஈரோடு மாநகராட்சி பகுதியில் 23 இடங்களிலும் கோவிஷீல்டு தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் டோஸ் போடும் முகம் இன்று நடைபெற்றது.

மக்கள் காலையிலேயே ஆர்வத்துடன் அந்தந்த தடுப்பூசி போடும் முகாமிற்கு சென்று நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.இன்று மட்டும் மாவட்டத்தில் 22 ஆயிரத்து 650 பேருக்கு தடுப்பூசி செல்லப்பட்டது.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today