ஈரோடு சூலை 3:

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 5ம் தேதி முதல் பருத்தி ஏலம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மஞ்சுளா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வருகின்ற 5ம் தேதி முதல் பிரதி வாரம் திங்கள் கிழமையன்று பருத்தி ஏல விற்பனை மறைமுக ஏல விற்பனை மூலம் நடைபெற உள்ளது. இந்த மறைமுக ஏல விற்பனையில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட மொத்த வியாபாரிகள், அரவை ஆலை மற்றும் நூற்பு ஆலை உரிமையாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டு கொள்முதல் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே விவசாயிகள் நன்கு முதிர்ந்து மலர்ந்து வெடித்த பருத்தியினை அதிகாலை நேரத்தில் பிரித்து விற்பனைக்கூடத்தில் நடைபெறும் ஏல விற்பனைக்கூடத்தில் நடைபெறும் ஏலவிற்பனைக்கு கொண்டுவருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது. இதன் மூலம் விளைபொருளை சரியான எடை, போட்டிவிலை, உடனடிப்பணத்திற்கு எவ்வித பிடித்தமும் இன்றி நல்ல விலைக்கு விற்று பயன்பெறலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

செய்தி நிருபர் ஈரோடு டுடே