ஈரோடு ஆக 25:

ஈரோடு மாநகராட்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு கூட்டம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் தலைமையில் நடந்தது. மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி மற்றும் குழு உறுப்பினர்கள் விமல் உட்பட பலர் பங்கேற்றனர். மாநகராட்சிக்கு உட்பட்ட பார்க் மற்றும் இதர பகுதிகளில் அதிக அளவில் மரங்கள் நடுவது. அதற்கான தண்ணீர் வசதி மாநகராட்சி ஏற்படுத்தி தர வேண்டும்.

இனிவரும் காலங்களில் மாநகராட்சி உட்பட்ட சாலை ஓரத்தில் உள்ள மரங்கள் பாதிப்படையாமல் தண்ணீர் தேங்கி நிற்கும் படி  இடைவெளி விட்டு தார் சாலை அமைப்பது. தன்னார்வ அமைப்புகள் உடன் தற்போது உள்ள மரங்களை பாதுகாக்கும் விதமாக மரங்களை ஒட்டி போடப்பட்ட தார் சாலையை ஒரு அடி இரண்டு அடி அகலத்திற்கு சிறிது தார் சாலை எடுத்து விட்டு, குழி தோண்டி அகல படுத்துவது.

தண்ணீர் தேங்கி நிற்கும் படி செய்வது. இதனாலும் நிலத்தடி நீர் உயர வாய்ப்பாகும். தன்னார்வ அமைப்புகளுடன் மாநகராட்சி பகுதியில் பழைய பொது அடி பம்பு போடப்பட்ட போர் குழாய் தற்பொழுது மூடப்பட்டு பயன்பாட்டுக்கு இல்லை. மூடியிருக்கும் போர் குழாய் அருகில் மழைநீர் சேகரிப்பு தொட்டி ஏற்படுத்தி மழை நீரை அதிக அளவில் சேமிக்கலாம்.

இதேபோல ஊர் பொது கிணறு அருகே மழை நீர் சேகரிப்பு திட்டம் ஏற்படுத்துவது. மாநகராட்சிக்கு உட்பட்ட குளங்களை சுத்தப்படுத்தி மரக்கன்றுகள் வைப்பது. காவேரி கரையோரங்கள் மரங்கள் மற்றும் பனை விதை விதைப்பது என முடிவு செய்யப்பட்டது.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today