ஈரோடு அக் 30:

ஈரோடு மாவட்டத்தில் 538 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் 6 கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

இதில் லட்சக்கணக்கான மக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதைத்தெடர்ந்து 7-வது கட்ட மாபெரும் தடுப்பூசி முகாம் 2 நாட்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி நேற்று ஈரோடு மாவட்டத்தில் 538 மையங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம் போடும் பணி தொடங்கியது. வழக்கம்போல் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

ஈரோடு மாநகர் பகுதியில் 60 வார்டிலும் தலா ஒரு தடுப்பூசி மையம் என 60 தடுப்பூசி முகாம் மற்றும் 4 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடந்தது. மேலும் ஈரோடு மாநகர் பகுதியில் இதுவரை தடுப்பூசி போடாதவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களுடைய வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அதன்படி 40 நடமாடும் வாகனம் மூலம் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாபெரும் தடுப்பூசி முகாம் இன்றும் (சனிக்கிழமை) ஈரோடு மாவட்டத்தில் 551 மையங்களில் நடக்கிறது. https://www.tnhealth.tn.gov.in  

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/