ஈரோடு செப் 20:

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா  தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. மேலும் மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தினமும் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிறப்பு மையங்களில் 18 வயது மேற்பட்டவர்கள் அனைவருக்கும்  தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறியதாவது:- ஈரோடு மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மொத்த மக்கள்தொகை 24  லட்சத்து 33 ஆயிரத்து 76 பேர். இதில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் எண்ணிக்கை 18 லட்சத்து 97 ஆயிரத்து 312 ஆகும். நேற்றுவரை மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 14 லட்சத்து 606. இதில் முதல் தவணைத் தடுப்பூசியை மட்டும் 11 லட்சத்து 12 ஆயிரத்து 542 பேர் செலுத்தியுள்ளனர். இரண்டாம் தவணை தடுப்பூசியை 2 லட்சத்து 88 ஆயிரத்து 64 பேர் செலுத்தியுள்ளனர். இதுவரை 7 லட்சத்து 84 ஆயிரத்து 770 பேர் இன்னமும் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை.

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/